உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேனி:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு ‘போஸ்ட்’ மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசும், ‘சிறப்பு போஸ்ட்’ மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை மாநில அரசும் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற escholaship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வருகிற பிப்ரவரி 10-ந்தேதி கடைசி நாள். தேனி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இத்தகவல் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story