சுற்றுலா பயணிகள் வருகை குறைவு


சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
x
தினத்தந்தி 12 Jan 2022 4:21 PM GMT (Updated: 12 Jan 2022 4:21 PM GMT)

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

ஊட்டி

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

ஊட்டியில் கட்டுப்பாடுகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து சுற்றுலா மையங்களிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு இருக்கிறது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

தோட்டக்கலை பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்களின் உள்ளே உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். புல்வெளிகளில் அமரக்கூடாது. எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளால் ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. 

வருகை குறைந்தது

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தேயிலை பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் கடந்த வாரத்தை விட தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

 புல்வெளிகளுக்குள் செல்லாமல் இருக்க சுற்றிலும் கயிறு கட்டி மூடப் பட்டது.  இதனால் நடைபாதை, சாலையில் மட்டும் நடந்து சென்று கண்டு ரசித்து வருகின்றனர். புகைப்படம் எடுக்கும்போது முககவசத்தை அகற்றி விட்டு, எடுத்த பின்னர் மீண்டும் அணிய வேண்டும். கடந்த வாரம் ஊட்டி தாவர வியல் பூங்காவுக்கு தினமும் 2,600 பேருக்கு மேல் வருகை தந்தனர். 

புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும் சுற்றுலா பயணிகள் வருகை ஆயிரத்து 400-க்கும் கீழ் குறைந்து உள்ளது. 

வெறிச்சோடின

ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 10-ந் தேதி 1,389 பேர், நேற்று முன்தினம் 1,366 பேர் ஊட்டி ரோஜா பூங்காவுக்கு 10-ந் தேதி 329 பேர், நேற்று முன்தினம் 330 பேர் வருகை தந்தனர். வருகை குறைவால் சில சமயங்களில் சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.


Next Story