இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 9:55 PM IST (Updated: 12 Jan 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: 

தேனி பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் தீரஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டித்தும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க நிர்வாகிகளை பல்கலைக்கழகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story