மாவட்ட செய்திகள்

487 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-நலத்திட்ட உதவிகள் + "||" + Gold-welfare assistance to 487 women in Tali

487 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-நலத்திட்ட உதவிகள்

487 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்-நலத்திட்ட உதவிகள்
திருவாரூர் மாவட்டத்தில் 487 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டத்தில் 487  பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார். 
திருவாரூர்
திருவாரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் தேவா முன்னிலை வகித்தார். இதில் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 183 பேருக்கு திருமண உதவியுடன் தாலிக்கு தங்கத்தை வழங்கினார்.
இதில் உதவி கலெக்டர் பாலசந்திரன், சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர், பள்ளி கல்விக்குழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.
கொரடாச்ே்சரி 
கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 155 பயனாளிகளுக்கு ரூ. 64.60 லட்சம் மதிப்பில்  தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில்  மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நன்னிலம் 
நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 149 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் 25 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆகியவற்றை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன், நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர் விஜயலெட்சுமி குணசேகரன், துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முகமது உதுமான்,  மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் மனோகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வலங்கைமான் 
வலங்கைமானில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கண்மணி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்பரசன் வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் புளியக்குடி கிராமத்தை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 15 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவநேசன், தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் கலந்துகொண்டனர்.