மாவட்ட செய்திகள்

மந்தாரக்குப்பம் அருகே குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + "||" + Public siege of the Panchayat Council office

மந்தாரக்குப்பம் அருகே குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மந்தாரக்குப்பம் அருகே குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மந்தாரக்குப்பம் அருகே குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மந்தாரக்குப்பம், 

கம்மாபுரம் ஒன்றியம் மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 8-வது வார்டு பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

முற்றுகை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்து தரக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.  இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சவுந்தரபாண்டியன், ஊராட்சி மன்ற செயலாளர் ஆனந்த் ஆகியோர் விரைந்து ெசன்று விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராடத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. நெல்கொள்முதல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகை
நெல்கொள்முதல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.
2. சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவம் துணை கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் முற்றுகை போராட்டம்
சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவம் துணை கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் முற்றுகை போராட்டம்.
3. ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
4. தியாகதுருகம் அருகே பரபரப்பு பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து ரேஷன்கடையை பொதுமக்கள் முற்றுகை
தியாதுருகம் அருகே மண்எண்ணெயை முறையாக வழங்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து ரேஷன் கடையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5. ஊக்கத் தொகை வழங்கக்கோரி நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்தூய்மைப் பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
ஊக்கத் தொகை வழங்கக்கோரி நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்தூய்மைப் பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை