மாவட்ட செய்திகள்

பண்ருட்டியில் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி + "||" + Student attempts suicide by jumping off railway overpass

பண்ருட்டியில் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

பண்ருட்டியில் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
பண்ருட்டியில் அண்ணன் தன்னிடம் பேசாததால் மனமுடைந்த மாணவி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏ.கே. குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் பிரபாவதி (வயது 17). இவர் பண்ருட்டியில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். 
நேற்று காலை வழக்கம் போல் பிரபாவதி பயிற்சி பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த சக மாணவிகளிடம் தான் கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

பாலத்தில் இருந்து குதித்தார்

அப்போது, எதிரே பண்ருட்டி-சென்னை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதிக்கு சென்றார். பாலத்தின் நடுபகுதிக்கு சென்ற அவர், யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென கீழே குதித்தார். இதில் அவரது இரண்டு கால்கள் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து பிரபாவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 போலீஸ் விசாரணை

இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின், முதல் கட்ட விசாரணையில் பிரபாவதி செல்போன் அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இதை அவரது அண்ணன் கோபி கண்டித்ததுடன், கடந்த 2 நாட்களாக தங்கையிடம் பேசாமல் இருந்து வந்தார். அண்ணன் தன்னிடம் பேசவில்லையே என்று மனஉளைச்சலில் இருந்த பிரபாவதி இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.