திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 10:40 PM IST (Updated: 12 Jan 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு கீழத்தாழனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமமாலினிமுர்த்தி, விளந்தை ஊராட்சி மன்ற தலைவர் பூமா, சடைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோளப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வரவேற்றார். காட்டுப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் செல்வக்குமார், வில்லிவலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்விவெற்றிச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வரும் பணிகளில் அரசியல் தலையீட்டை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளை பறிக்கும் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணிதள பொறுப்பாளர்களை மாற்றும் அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து பறிக்கும் கூடுதல் வட்டார வளர்ச்சி(கிராம ஊராட்சி) அலுவலரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 18 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கொணக்கலவாடி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது வில்லிவலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்விவெற்றிச்செல்வன் திடீரென மயங்கிவிழுந்தார். உடனே அவரை சக ஊராட்சி மன்ற தலைவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story