பலத்த மழை


பலத்த மழை
x
தினத்தந்தி 12 Jan 2022 5:21 PM GMT (Updated: 12 Jan 2022 5:21 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8.45 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாரல் மலையானது சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. வத்திராயிருப்பு பகுதியில் பெய்யத பலத்த மழையால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. மழை நீருடன் வாருகால் கழிவுநீர்களும் சேர்ந்து ஓடியதால் தெருக்கள் முழுவதும் மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து ஆறாக ஓடியது. வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது.இதேபோல் அக்ரஹாரம் வடக்குத் தெருவில் மழைநீர் செல்ல வாருகால் வசதி சரிவர இல்லாததால் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் தாழ்வாக இருப்பதால் மழை நீர் உடன் கழிவு நீர் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடியதால் சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமம் அடைந்தனர். எனவே தாழ்வாக உள்ள கழிவுநீர் கால்வாய்களில் உயர்த்தி அமைக்க வழி வகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story