திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 10:51 PM IST (Updated: 12 Jan 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்-கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. ஒரு சில நேரங்களில் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பல்லடத்துக்கு பஞ்சு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று காலை 10 மணி அளவில் சென்றபோது திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் சிறிய வாகனங்கள் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story