சங்கராபுரம் அருகே பரபரப்பு ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் ரத்த வாந்தி
சங்கராபுரம் அருகே பரபரப்பு ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் ரத்த வாந்தி சாலையோரம் நிறுத்த முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீதுமோதியது
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று முன்தினம் காலை அரசம்பட்டு வழியாக கச்சிராயப்பாளையத்துக்கு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னையன்(வயது 50) பஸ்சை ஓட்டினார். சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி காலனி அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென ரத்தவாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்த முயன்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தபாவாடை(55) என்பவர் மீது மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதேபோல் மயங்கி விழுந்த டிரைவர் சின்னையனை சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இ்ந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம்செய்த பயணிகள் 15 பேரும் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story