நம்பியூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
நம்பியூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நம்பியூர் ஊராட்சி ஒன்றியக் குழு மாதாந்திரக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமலதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுப்ரமணியம், துணைத் தலைவர் அமுதா உள்பட நம்பியூர் ஊராட்சி ஒன்றிய குழுவைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டபோது அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் ரங்கசாமி தலையிட்டு, அரசு வளர்ச்சி திட்ட பணிகளில் ஆளுங்கட்சி நபர்கள் பணிகளை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு அரசின் பணிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என கூறி அவர், ஒன்றியக்குழு தலைவர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் அமுதா கண்ணன் உள்பட 10 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமலதா, தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்தார்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் நம்பியூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story