உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது ரூ 1 லட்சம் பறிமுதல்


உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது ரூ 1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jan 2022 10:58 PM IST (Updated: 12 Jan 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது ரூ 1 லட்சம் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் மலையடிவாரத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமொழியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன்ராஜா, அப்பாண்டை ராஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் குன்னத்தூர் மலையடிவாரத்திற்கு விரைந்து சென்று, அங்கு சூதாடிக் கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்து, அதைஊரை சேர்ந்த அன்பழகன், முருகன், கொக்கான்காடு பகுதியை சேர்ந்த ஏழுமலை, ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், எல்லைகிராமத்தை சேர்ந்த ஏழுமலை ஆகியோரை கைது செய்தனர். 4 பேர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மேலும் பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம், 6 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பிய ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story