சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர், 2 ஊழியர்களுக்கு கொரோனா
வட்டார வளர்ச்சி அலுவலர், 2 ஊழியர்களுக்கு கொரோனா
சோளிங்கர்
சோளிங்கர் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் 2 ஊழயர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சளி, இருமல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அலுவலக ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது.
அதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.
Related Tags :
Next Story