மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 423 பேருக்கு கொரோனா


மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 423 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jan 2022 11:22 PM IST (Updated: 12 Jan 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 423 பேருக்கு கொரோனா

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தொற்று பரவல் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காவல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளும் பலர் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களும் அடங்குவார்கள்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அதிகாரிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மாவட்டத்தின் தொற்று நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரத்து 698 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story