வேலூரில் பா.ஜ.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்


வேலூரில் பா.ஜ.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 11:24 PM IST (Updated: 12 Jan 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம்

வேலூர்

வேலூர் மாவட்ட பா.ஜனதா கட்சி பிரசார பிரிவு, அமைப்புசாரா மற்றும் வணிகம், ஓ.பி.சி. பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்குவதில் அலட்சியமாக செயல்பட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து மனிதசங்கிலி போராட்டம் வேலூர் காந்திசிலை அருகே நேற்று நடந்தது. பிரசார பிரிவு, ஓ.பி.சி. பிரிவு தலைவர்கள் செந்தில், சதீஷ், சீனிவாசலு ஆகியோர் தலைமை தாங்கினர். வணிக பிரிவு மாநில செயலாளர் இளேங்கோ, மாவட்ட துணைத்தலைவர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் தசரதன் கலந்து கொண்டார்.

போராட்டத்தின்போது பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், பொதுச்செயலாளர்கள் பாஸ்கர், பாபு, ஓ.பி.சி. பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story