மாவட்ட செய்திகள்

2 பெண்கள் உள்பட 5 பேர் கைது + "||" + 5 people including 2 women were arrested

2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
மசாஜ் சென்டரில் விபசாரம் செய்ததாக 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானல்

கொடைக்கானல் நகரில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் ஆலோசனையின் பேரில், இன்ஸ்பெக்டர் சும‌தி, சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் தலைமையிலான‌ போலீசார் கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர்.

அப்போது ம‌சாஜ் சென்ட‌ரில் அழகிகளை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த கேரள மாநிலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்களை கைது செய்தனர். 

மேலும் மசாஜ் சென்டரின் மற்றொரு அறையில் பதுங்கி இருந்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த செல்வ‌ராஜ் (வயது 59), பூம்பாறை ப‌குதியை சேர்ந்த‌ ஜ‌ன‌க‌ராஜ் (21), ம‌துரையை சேர்ந்த‌ ச‌ர‌ண் (22) ஆகியோரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.