மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் சாவு + "||" + electric shock

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் சாவு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் சாவு
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
வெள்ளியணை,
கரூர் மாவட்டம் காக்காவாடி ஊராட்சி மேல் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 80), விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக ஓட்டி சென்றுள்ளார். அப்போது அங்கு மின்மாற்றிக்கு கொண்டு செல்லும் உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை கவனிக்காத அவர் மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் தாக்கி முதியவர் பலி
சீர்காழி அருகே லாரி உரசியதில் மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் பரிதாபமாக இறந்தார்.