மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது + "||" + 3 arrested for breaking into a house at midnight

நள்ளிரவில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

நள்ளிரவில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனி முகம்மது என்பவரின் மனைவி மும்தாஜ் பேகம் (வயது 49). மகளின் மருத்துவப் படிப்பிற்காக மதுரையில் தங்கி இருக்கும் இவரது இங்குள்ள வீடு பூட்டி இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அரை பவுன் மோதிரம் ரொக்கம் ரூ.15 ஆயிரம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றது தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 
இந்த விசாரணையில் தேனி அரண்மனை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முத்தையா (வயது 45) மாரியப்பன் மகன் மணிகண்டன் (34) கருப்பையா மகன் ரங்கநாதன் (49) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 
இதை தொடர்ந்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து அரை பவுன் மோதிரம் ரூ.2 ஆயிரம் ரொக்கம், வெள்ளி கொலுசு முதலியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.