காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை கல்லூரி மாணவர் சைக்கிள் பயணம்
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை கல்லூரி மாணவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
கரூர்,
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவம்மயூரா (வயது 20). கல்லூரி மாணவரான இவர் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் என்ற இடத்திலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய சிவம்மயூரா காஷ்மீர் சென்றார். பின்னர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் நேற்று கரூர் பைபாஸ் சாலைக்கு வந்தார். கடந்த 26 நாட்களில் 4,973 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்ட இவருக்கு கரூர் ரவுண்ட் டேபிள் சங்கத்தினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story