116 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 21 ஆயிரத்து 127 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 12 பேர் வீடு திரும்பி உள்ளார். இதுவரை 20 ஆயிரத்து 382 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 386 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 359 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று 100-ஐ கடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story