மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை + "||" + Sale of Pongal items in Ariyalur district

அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை

அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  செங்கரும்பு, மஞ்சள் கொத்து, பொங்கல் பானை, அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் விற்பனையும் ஜோராக நடைபெற்று வருகிறது. செங்கரும்பு வயல்களில் இருந்து வெட்டப்பட்டு நேரடியாக தா.பழூர், காரைக்குறிச்சி, மதனத்தூர், கோட்டியால், அணைக்குடம் உள்ளிட்ட கிராமங்களில் லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. 10 கரும்புகள் கொண்ட ஒரு கரும்பு கட்டு ரூ.225 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கொலையனூர், சுந்தரேசபுரம், உல்லியக்குடி, நத்தவெளி போன்ற ஊர்களில் பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யப்பட்டது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனைக்காக வாங்கி சென்றனர்.
 அதிக மழையின் காரணமாக இந்த ஆண்டு கரும்புகள் உயரமாக வளரவில்லை. மேலும், எலிகள் தொல்லையினால் கரும்புகள் வீணானது. இருந்தாலும், இங்கு விவசாயிகள் விற்கும் ஒரு கரும்பின் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. இதனை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று சில்லரை விலையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்து வருகிறார்கள்.