மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு + "||" + Breaking the lock of the house and stealing

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி நகை திருட்டு போனது
பெரம்பலூர்
பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சாந்தினி (வயது 27) என்ற மனைவியும், 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சுரேஷ், சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் சாந்தினி தனது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். சாந்தினி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக குழந்தையுடன் சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சாத்தப்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் சாந்தினிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி அரைஞாண் கொடியை திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.