மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு
மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி மருதையாற்று படுகை பகுதியில் சிலர் சரக்கு ஆட்டோக்களில் மணல் அள்ளி கடத்துவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதையாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக காசாங்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 26), கோவிந்தபுத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சக்திவேல் (20), ஸ்ரீ்புரந்தான் படுகாள தெருவை சேர்ந்த பாரத் (34) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story