ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்


ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்
x
தினத்தந்தி 13 Jan 2022 12:45 AM IST (Updated: 13 Jan 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

சமயபுரம், ஜன.13-
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா. அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48).விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி ஜூலி என்ற நாயும் வளர்த்து வருகிறார். பரமசிவம் வளர்த்து வரும் ஆடுகளும், நாயும் ஒன்றாகவே சுற்றித்திரியும். இந்தநிலையில் அவர் வளர்த்து வந்த ஆடு ஒரு குட்டி ஈன்றது. தொடர்ந்து அந்த ஆடு செத்தது.  இதனால் ஆட்டுக்குட்டிக்கு பரமசிவம் புட்டிப்பால் கொடுத்து வந்தார். இந்நிலையில் நாயும் குட்டி போட்டது. அப்போது, நாய்குட்டிகள் பால்குடிப்பதை பார்த்த ஆட்டுக்குட்டி அருகே சென்று நாயிடம் பால்குடித்தது. நாயும் ஆட்டுக்குட்டியை ஒன்றும் செய்யாமல் பால் கொடுத்தது. தொடர்ந்து ஆட்டுக்குட்டி அந்த நாயிடம் பால் குடித்து வருகிறது. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Next Story