மாவட்ட செய்திகள்

சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு + "||" + Gate of Heaven

சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி கே.கே.நகர் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
செம்பட்டு, ஜன.13-
திருச்சி கே.கே.நகர் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
மோகினி அலங்காரம்
திருச்சி கே.கே.நகர் இந்திரா நகரில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி நேற்று மாலையில் பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் வேத பாராயணம் முழங்க மோகினி அலங்கார உள் பிரகார ஊர்வலம் நடைபெற்றது.
சொர்க்கவாசல்
 இதனைத் தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக காலை 5 மணி அளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து சொர்க்கவாசல் வழியாக அலங்கார மண்டபத்தில் எழுந்தருள்வார். இதனைத் தொடர்ந்து காலை 6.30 மணி முதல் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
 பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் இன்று இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
2. வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
3. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
4. வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.