அரியலூரில் பா.ஜ.க.வினர் மனித சங்கிலி
அரியலூரில் பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
தாமரைக்குளம்
பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது ஆளும் காங்கிரஸ் அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க தவறி குளறுபடி செய்தது. இதனை கண்டித்து அரியலூரில் பா.ஜ.க.வினர் பஸ் நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பஞ்சாப் அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் பங்கேற்றனர். பின்னர், அரியலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் அய்யப்பன் நிருபர்களிடம் கூறுகையில், பாதுகாப்பு குளறுபடியால் நாம் ஏற்கனவே 1984-ம் ஆண்டு மற்றும் 1991-ம் ஆண்டுகளில் இரு பிரதமர்களை இழந்திருக்கிறோம். ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினர் சாலையை கடக்கும்போது காவல் துறைக்கு தெரிய வருகிறது. ஆனால் பாரத பிரதமர் சாலை மார்க்கமாக வருவது தெரியவில்லை எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story