சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது


சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2022 1:04 AM IST (Updated: 13 Jan 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60). இவர் தனது தோட்டத்தில் இலந்தப்பழம் மரம் வளர்த்து வருகிறார். அந்த மரத்தில் பழம் பறிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று 8 வயது மற்றும் 7 வயது சிறுமிகள் இலந்தைப்பழம் பறிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது இளங்கோவன் 8 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு காடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story