மார்த்தாண்டத்தில் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா
போலீஸ் ஏட்டுக்கு கொரோனா
குழித்துறை,
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு போலீஸ் ஏட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் வீட்டு தனிமையில் சென்றார்.
இந்த நிலையில் அவருடன் பணியாற்றி வரும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஒரு சில போலீசாருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே போலீஸ் ஏட்டுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக போலீஸ் நிலையம் முன்பு ரிப்பன் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகார் மனுக்கள் போலீஸ் நிலையத்தின் வெளியே பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாறும் பகுதியில் பெறப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story