புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 12 Jan 2022 8:30 PM GMT (Updated: 12 Jan 2022 8:30 PM GMT)

புகார் பெட்டி

மதுரை
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
மதுரை ெதப்பக்குளம்-அனுப்பானடி சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அந்த சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.  தெருநாய்களால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தினை  சந்திக்கும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனகராஜன், தெப்பக்குளம்.
மின்விளக்கு எரியுமா?
மதுரை ரெயில் நிலையத்தின் காத்திருப்போர் அறையில் உள்ள கழிப்பறையில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெளியூர் செல்லும் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அவசரத்துக்கு கழிப்பறையை உபயோகப்படுத்த முடியவில்லை. அங்கு மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், ராமநாதபுரம்.
குடிநீர்வசதி தேவை
மதுரை மாவட்டம் புதுத்தாமரைப்பட்டியில் 4 மற்றும் 5-வது வார்டு மங்களபுரம் பகுதியில் குடிநீர் வினியோகம் போதுமான அளவில் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். திருமோகூரில் இருந்து பெண்கள் தண்ணீர் எடுத்துவரும் அவலநிலை உள்ளது. அதிகாரிகள் இதனை கவனித்து மங்களபுரத்தில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமமக்கள், மங்களபுரம்.
நாய்களால் விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மெயின்ரோட்டில் தெருநாய்கள் அதிகளவில் நடமாடுகின்றன. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டிசெல்லவே மிகவும் அவதிப்படுகின்றனர். விபத்துகள் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நெற்குப்பை.
ரேஷன் கடை தேவை
மதுரை செல்லூர் கீழகைலாசபுரம் 7-வது வார்டு பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் ரேஷன் கடை இல்லை. இதனால் பொங்கல் பரிசு உள்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. பெண்கள் மற்றும் முதியோர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தபகுதியில் ரேஷன்கடை ஏற்படுத்த  ஆவன செய்ய வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.

Next Story