சேலம் மாவட்டத்தில் புதிதாக 285 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 285 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 184 பேர் பாதிக்கப்பட்டனர். கெங்கவல்லி, தலைவாசலில் தலா ஒருவரும், கொங்கணாபுரம், பெத்தநாயக்கன்பாளையத்தில் 2 பேரும், காடையாம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடியில் 3 பேரும், மகுடஞ்சாவடி, ஏற்காடு, ஆத்தூரில் 4 பேரும், சேலம் ஒன்றியம், சங்ககிரி, ஆத்தூரில் 5 பேரும், தாரமங்கலத்தில் 10 பேரும், வீரபாண்டியில் 13 பேரும், தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு வந்த 2 பேரும் என மொத்தம் 285 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 869 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்து 958 பேர் குணமாகி உள்ளனர். ஆயிரத்து 732 பேர் இறந்தனர்.
Related Tags :
Next Story