புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை பகுதி மக்கள் அளித்துள்ள கோரிக்கை விவரம் வருமாறு
தொற்று நோய் பரவும் அபாயம்
தஞ்சையில் மேலவெளி பஞ்சாயத்து சிங்கபெருமாள் குளம் கீழ்கரை வடகரை பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் மக்கள் தெருவோரத்தில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். கொட்டப்பட்ட குப்பைகளும் உரிய நேரத்தில் அள்ளப்படுவது இல்லை. மேலும் அந்த பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடாமலும், குப்பை தொட்டிகள் வைப்பதுடன் உரிய நேரத்தில் குப்பைகளை அள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்
பொதுமக்கள் சிங்கபெருமாள் குளம்.
தார் சாலை வேண்டும்
தஞ்சை நகரில் முனிசிபல் காலனி பூங்காவில் இருந்து கல்யாண நகர் மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. மண் சாலையாக உள்ள இந்த சாலையில் தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். மேலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொது மக்களின் நலன்கருதி தார் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சீனிவாசன் முனிசிபல்காலனி.
Related Tags :
Next Story