மாவட்ட செய்திகள்

நெல்லையில் பூக்கள் விலை `கிடுகிடு' உயர்வுஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை + "||" + The price of flowers has risen sharply

நெல்லையில் பூக்கள் விலை `கிடுகிடு' உயர்வுஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

நெல்லையில் பூக்கள் விலை `கிடுகிடு' உயர்வுஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
நெல்லையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது
நெல்லை:
நெல்லையில் பூக்கள் விலை `கிடுகிடு'வென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு
நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பூக்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை உள்ளிட்ட காலக்கட்டங்களில் பூ தேவைப்பாடு அதிகரிப்பதால் விலையும் உயரும்.
நாளை (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஏற்கனவே பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பண்டிகை நாட்கள் வந்ததால், பூக்கள் விலை சற்று உயர்ந்தது. பின்னர் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை சற்று இறங்கு முகத்தில் இருந்தது.
 மல்லிகை ரூ.3,000
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்திற்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
செவ்வந்தி பூ, ரோஜா தலா ரூ.150-க்கும், கேந்தி பூ ரூ.80-க்கும் விற்கப்பட்டது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு பூக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
...........