வெள்ளிச்சந்தை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை


வெள்ளிச்சந்தை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Jan 2022 3:49 PM IST (Updated: 26 Jan 2022 3:49 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருேக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம், 
வெள்ளிச்சந்தை அருேக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
ஆன் சூதாட்டம்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள வெள்ளமோடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் விஜய் (வயது24). இவருக்கு ஆன்லைனில் சூதாடும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து ஆன்லைனில் சூதாடி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். 
இதனால், விஜய் வீட்டைவிட்டு வெளியேறி அனந்தநாடார்குடியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்க தொடங்கினார். அத்துடன் முட்டத்தில் உள்ள ஒரு தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏற்றி, இறக்கும் வேலைக்கு சென்று வந்தார். வேலை செய்து கிடைத்த பணத்தை வைத்து தொடர்ந்து ஆன்லைனில் சூதாடி வந்தார். இவ்வாறு ஆன்லைன் சூதாட்டத்தில் விஜய் பல லட்சம் ரூபாய் வரை இழந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இதனால், மனமுடைந்த விஜய் நேற்று முன்தினம் இரவு மேலசங்கரன்குழி இரட்டைகுளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். ேநற்று காலையில் அந்த வழியாக வந்தவர்கள் விஜய் பிணமாக கிடப்பதை கண்டு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
1 More update

Next Story