வேளாண் அதிகாரி ஆவதே லட்சியம் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி


வேளாண் அதிகாரி ஆவதே லட்சியம் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2022 4:44 PM GMT (Updated: 28 Jan 2022 4:44 PM GMT)

வேளாண் அதிகாரி ஆவதே லட்சியம் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மெயின் பஜாரை சேர்ந்தவர் நாகராஜ். பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பூவிழி. இவர்களது மகள் பூர்வா ஸ்ரீ. இவர் கோத்த கிரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு முடித்தார். 

தற்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளார். 

இதுகுறித்து மாணவி பூர்வாஸ்ரீ கூறியதாவது:- நான் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்தேன். பிளஸ்-1, பிளஸ்-2 இந்திய இளநிலை கல்வி சான்றிதழ் (ஐ.சி.எஸ்.இ.) பாடத்திட்டத்தில் படித்தேன். பிளஸ்-2 பொதுத்தேர்வை நன்றாக எழுதினேன். 

தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். இருப்பினும் வேளாண் படிப்பில் ஆர்வம் இருந்தது. தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 

நான் தொடர்ந்து படிக்க எனது பெற்றோர் ஊக்கம் அளித்தனர். நான் பி.எஸ்.சி. வேளாண்மை படிக்க உள்ளேன். தற்போது உள்ள நிலையை கவனித்து எதிர்காலத்தில் வேளாண் அதிகாரியாக ஆவதே எனது லட்சியம். 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story