குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெட்ரோல் நிலைய ஊழியர் தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெட்ரோல் நிலைய ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2022 3:59 PM IST (Updated: 4 Feb 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெட்ரோல் நிலைய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நந்தனம், சி.ஐ.டி. நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 36). இவர், அதே பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மனோஜ்குமார், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மனோஜ்குமாருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். குழந்தை இல்லாத ஏக்கத்திலேயே மனோஜ்குமார் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மதன் (வயது 23). இவர், வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரது பெற்றோர், அவரை கண்டித்தனர். இதில் விரக்தி அடைந்த மதன், வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story