வட பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

வட பொன்பரப்பி  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Feb 2022 10:35 PM IST (Updated: 4 Feb 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

வட பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

மூங்கில்துறைப்பட்டு

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கர்ப்பிணிகள் அறை, தடுப்பூசி போடும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் தடுப்பூசி போடப்படுவது குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கிருந்து வடபொன்பரப்பி ரேஷன்கடைக்கு சென்ற கலெக்டர் ஸ்ரீதர் அங்கு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் குறித்தும் அவை சரியான எடையில் வழங்கப்படுகிறதா? என்றும்  பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Next Story