லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு சரவணன் அறிவுறுத்தல் படியும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நாகூர் யானைகட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக லாட்டரி சீட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்த பாவா பக்ருதீன் (வயது 42), தெத்தி சமரச நகரை சேர்ந்த முஜீபு ரகுமான் (52) என்பதும், இவர்கள் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவா பக்ருதீன், முஜீபு ரகுமான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story