புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்
மயிலாடுதுறை அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடைகளுக்கு அபராதம்
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி கடைவீதியில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை அகற்றி அவற்றை அழித்தனர். மேலும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடைவீதி பகுதிகளில் முககவசம் அணியாமல் வந்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கும், கடைகளில் முககவசம் அணியாமல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது. இந்த சோதனையில் குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மலிங்கம், முத்துக்குமாரசாமி, முருகேசன், முரளி, பிரித்திவிராஜ், முருகன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story