கடைசி நாளான நேற்று மட்டும் 174 பேர் வேட்பு மனு தாக்கல்


கடைசி நாளான நேற்று மட்டும் 174 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 4 Feb 2022 11:16 PM IST (Updated: 4 Feb 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 1 மற்றும் 2 வது மண்டலங்களில் கடைசி நாளான நேற்று மட்டும் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அனுப்பர்பாளையம்
திருப்பூர் 1 மற்றும் 2-வது மண்டலங்களில் கடைசி நாளான நேற்று மட்டும் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று காலை முதலே வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் குவிந்தனர். 
அந்தவகையில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்படி தி.மு.க.-9, அ.தி.மு.க.-14, காங்கிரஸ்-4, பா.ஜ.க.-10, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-6, ம.தி.மு.க.-5, பா.ம.க.-4, தே.மு.தி.க.-3, மக்கள் நீதி மய்யம்-4, நாம் தமிழர் கட்சி-7, அ.ம.மு.க.-1, சமத்துவ மக்கள் கட்சி-1, எஸ்.டி.பி.ஐ.-1, பகுஜன் சமாஜ் கட்சி-1 சுயேட்சை-12 என மொத்தம் 86 வேட்பாளர்கள் முன்மொழிபவர்களுடன் வந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். 
174 பேர்
இதேபோல் போயம்பாளையம் நஞ்சப்பாநகரில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்தில் நேற்று ஒரேநாளில் 88 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்படி தி.மு.க.-11, அ.தி.மு.க.-15, பா.ஜ.க.-14, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-1, ம.தி.மு.க.-2, பா.ம.க.-7, தே.மு.தி.க.-2, மக்கள் நீதி மய்யம்-4, நாம் தமிழர் கட்சி-4, அ.ம.மு.க.-3, சமத்துவ மக்கள் கட்சி-1, எஸ்.டி.பி.ஐ.-1, சுயேச்சை-20 என மொத்தம் 88 வேட்பாளர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். 
திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலங்களில் கடைசி நாளான நேற்று ஒரேநாளில் மொத்தம் 174 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்ததையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் கேட்டை இழுத்துப் பூட்டினர்.

Next Story