விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கிய முஸ்லிம்கள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு ரூ.1 லட்சத்தை முஸ்லிம்கள் வழங்கினா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்திற்காக விருத்தாசலம் நவாப் பள்ளிவாசல் முத்தவல்லி முகமது முஸ்தபா தலைமையில் பொருளாளர் சோழன் சம்சுதீன், ஜங்ஷன் ரோடு முஸ்லிம் வியாபாரிகள் சார்பில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கும்பாபிஷேக கமிட்டி குழு தலைவர் அகர்சந்திடம் வழங்கினர். சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு நிதி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகளை அகர்சந்த் வெகுவாக பாராட்டினார். அப்போது வானவில் பஸ் உரிமையாளர் அன்சர் அலி, ஆற்காடு ஜலாலுதீன், ஜெயம் ராஜாமுகமது, கோல்டன் சேட்டு முகமது, ஆசாத், அப்துல்லா, இப்ராகீம், ஷாஜகான், வக்கீல் மணிகண்டராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story