புகாருக்கு இடமளிக்காமல் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி அறிவுரை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் தேர்தல் பணிமேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி அறிவுரை வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் தேர்தல் பணிமேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி அறிவுரை வழங்கினார்.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் எஸ்.வளர்மதி நேற்று பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், அம்மூர் ஆகிய பேரூராட்சிகளிலும், அரக்கோணம், சோளிங்கர் நகராட்சி அலுவலகங்களிலும் கடைசி நாள் வேட்புமனு தாக்கல் நடைபெறுவதை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களையும், அதிகமாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வார்டுகள் குறித்தும் கேட்டறிந்தார். வேட்புமனுக்களை வேட்பாளர்களிடம் இருந்து பெறும்போது உரிய ஆவணங்கள் முறையாக இணைத்து வழங்கப்படுகிறதா என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக பார்த்து பெற வேண்டும். வேட்புமனுக்கள் பெறப்பட்ட விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
புகாருக்கு இடமளிக்கால்
வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது கவனமுடன் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அனைத்து பதிவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். எவ்வித பிரச்சினைகளுக்கும், புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து அரக்கோணம் நகராட்சி வாக்கு எண்ணும் மையமான ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறையை பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள் தனித்தனியாக வந்து செல்லும் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளதையும், வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கணேசன், லதா, பரந்தாமன், சிவராமன், தாசில்தார் ரவிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, பிரபு மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story