மருதவல்லிப்பாளையத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 21 பேர் காயம்
மருதவல்லிப்பாளையத்தில் நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகாவில் உள்ள மருதவல்லிப்பாளையத்தில் காளை விடும் விழா நேற்று நடந்தது. அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் திருக்குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, துணைத்தலைவர் சகுந்தலா ரவிக்குமார் ஆகியோர் உறுதிமொழியை ஏற்று விழாவை தொடங்கி வைத்தனர்.
விழாவில் 175 காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் தெருவில் நின்றிருந்தவர்களை தூக்கி வீசியது. இதில் 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தீபிகா, மராட்டியப்பாளையம் ஆரம்ப சுகாதார மருத்துவர் வெற்றிச்செல்வன், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் ஆரோக்கியநாதன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் சாட்லு துரை, அன்பரசு ஆகியோர் விழாவை கண்காணித்தனர்.
காளை விடும் விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story