திருப்பத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை. தேர்தல் பாார்வையாளர் பிரதீப் குமார் எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பாார்வையாளர் பிரதீப் குமார் கூறினார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பாார்வையாளர் பிரதீப் குமார் கூறினார்.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப்குமார் நேற்று வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுசெய்தார்.
அப்போது வேட்புமனு பெறப்படும் அறைகள், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள், பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகள் ஆகியவற்றை சரிபார்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நடவடிக்கை
மேலும் நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட அறைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் இருந்ததால் அவர்களை விசாரித்து வேட்பாளர்கள் உடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர் மீது புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும், அரசு வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
Related Tags :
Next Story