190 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது


190 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2022 11:35 PM IST (Updated: 4 Feb 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 190 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அனுப்பர்பாளையம்
திருப்பூரில் சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 190 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கஞ்சா கடத்தல்
கேரள மாநிலம் வாளையார் சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக கேரள மாநில கலால் உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று காலை வாளையாறு சோதனைச்சாவடியில் அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது தமிழ்நாட்டில் இருந்து கேரளா நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்று சோதனை சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்வதை கண்ட உடன் வாகனத்தை திருப்பி செல்வதை அதிகாரிகள் பார்த்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்தனர். 
190 கிலோ பறிமுதல்
அப்போது அந்த சரக்கு வாகனம் பொள்ளாச்சி வழியாக திருப்பூருக்கு வந்ததும், 15 வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட தெய்வீகநகர் பகுதிக்கு சென்றதும் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. 
இதை தொடர்ந்து கேரள அதிகாரிகள் 15 வேலம்பாளையம் போலீசாருடன் இணைந்து அந்த வாகனம் இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் அந்த வாகனத்தை பிடித்து அதில் இருந்த 190 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 
கஞ்சா கடத்தியதாக கேரளாவை சேர்ந்த சிவராம் என்கிற விஷ்ணு, ஜோபி ஜோசப் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2 பேரும் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு கஞ்சா கடத்தி சென்றபோது வாளையார் சோதனை சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்வதை பார்த்ததும், வாகனத்தை திருப்பி திருப்பூர் தெய்வீகநகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் இருக்கும் இடத்திற்கு சென்று கஞ்சாவை மறைத்து வைக்க முயன்றதும் தெரிய வந்தது. 
இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story