நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா
தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்தார்.
ஸ்ரீரங்கம், பிப்.5-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் ஹம்சவாகனத்தில் வீதி உலா வந்தார்.
தெப்பத்திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு 8 மணிக்கு வந்து சேர்ந்தார். அதன் பின் அங்கிருந்தவாறு நம்ெபருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பாடாகி உள்வீதிகளில் வலம் வந்து இரவு 7.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஹனுமந்தவாகனம்
தெப்பத்திருவிழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) ஹனுமந்தவாகனத்திலும், 6-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 7-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 8-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 9-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் வலம் வருகிறார்.தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 10-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள்உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.
முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.
திருமஞ்சனம்
9-ம் திருநாளான 12-ந்தேதி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 8 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றைபிரபைவாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம்சென்றடைகிறார்.இத்துடன்தெப்பத்திருவிழாநிறைவடைகிறது.

Related Tags :
Next Story