மாவட்டத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா

திருச்சி, பிப்.5-
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக 500 பேருக்கும் மேல் இருந்த தினசரி பாதிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 469 பேர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். ஆனால் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 3,736 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Tags :
Next Story