‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார்பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சி கூனிபஜார் சவேரியார் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
திருச்சி மாவட்டம், தொட்டியம். மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று வந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட் டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
தெருநாய்கள் தொல்லை
திருச்சி கிராப்பட்டி பகுதிகளில் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இரவு நேரங்களில் பணி முடிந்து வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு குரைத்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூக்கம் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புவனா, கிராப்பட்டி, திருச்சி.
குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள மலைகோவில் பகுதியில் கடந்த சில வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன், திருவெறும்பூர், திருச்சி.
Related Tags :
Next Story