போலீசாரின் வன்முறை வெறியாட்டத்தை ஊக்கப்படுத்த முடியாது
போலீசாரின் வன்முறை வெறியாட்டத்தை ஊக்கப்படுத்த முடியாது ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை,
மதுரைமாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நல்லகாமன். இவர் ஒத்திக்கு இருந்த வீட்டை காலி செய்வது தொடர்பாக கடந்த 1982-ல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில் நல்லகாமன், அவரது மனைவி ஆசிரியை சீனியம்மாள் ஆகியோரை கடந்த 1982-ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், நல்லகாமனின் ஆடைகளை கலைந்தும், சீனியம்மாளின் சேலையை அவிழ்த்து லாக்கப்பில் வைத்து கொடுமை படுத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2010-ம் ஆண்டு ரத்து செய்தது. இதனால் நல்லகாமன் தனக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல்செய்தார்.
இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப்- இன்ஸ் பெக்டர் பிரேம்குமாரும், நல்லகாமனும் இறந்தனர். இதனால், நல்லகாமனின் மகன் சுந்தரபாண்டியன் வழக்கை தொடர்ந்து நடத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- சுப்ரீம் கோர்ட்டு வழக்கை ரத்து செய்ததால், இழப்பீடு வழங்க முடியாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. சந்தேகத்தின் பலனை கருத்தில் கொண்டே சுப்ரீம் கோர்ட்டு விடுவித்துள்ளது. போலீசாரின் வன்முறையும், மனித உரிமை மீறலும் நடந்துள்ளது. அப்பாவிகள் மேல் போலீசாரின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது. நல்லகாமன் இப்போது உயிருடன் இல்லாததால், அவரது ேகாரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story