நகராட்சி அலுவலகங்களில் குவிந்த வேட்பாளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாளாக இருந்ததால் நேற்று நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமான வேட்பாளர்கள் குவிந்தனர்.
காரைக்குடி,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாளாக இருந்ததால் நேற்று நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமான வேட்பாளர்கள் குவிந்தனர்.
வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் தொடங்கியது. நேற்று மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளது. இவைகளில் மொத்தம் 117 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதேபோல் இளையான்குடி, நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 11 பேரூராட்சிகள் உள்ளன. இவைகளில் மொத்தம் 168 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் அந்தந்த நகராட்சிகளில் நடைபெற்றது.
அதிகளவில் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய நகராட்சிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சில கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் நகராட்சி வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் கடந்த சில நாட்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இ்ந்த நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிவித்ததை தொடர்ந்து மனு தாக்கல் சூடு பிடிக்க தொடங்கியது.
கடைசி நாளான நேற்று காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை உள்ளிட்ட நகராட்சி அலுவலகங்களில் கூட்டம் காணப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கூட்டத்தை சரி செய்தனர். மேலும் போலீசார் ஒலி பெருக்கி மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்கினர். இதேபோல் நேற்று காரைக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய விஜய் படத்துடன் கூடிய கொடியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். காரைக்குடியில் உள்ள 36-வார்டுகளில் தனியாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று காளி வேடமணிந்தவருடன் பெரியார் சிலை பகுதியில் இருந்து மேளதாளத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களின் வாகனங்களை 100 மீட்டருக்கு அப்பால் போலீசார் தடுத்து நிறுத்தினர
Related Tags :
Next Story