கொட்டப்பட்ட குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்


கொட்டப்பட்ட குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 5 Feb 2022 12:48 AM IST (Updated: 5 Feb 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவற்றை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கொள்ளிடம்:
புதுப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவற்றை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குப்பைகள்
கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் புளியந்துறை-பழையார் செல்லும் சாலையில் ஊராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் சாலை குறுகி காணப்படுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. 
 பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய இந்த சாலையின் இருபுறங்களிலும் இறைச்சி மற்றும் கோழி கழிவுகள் மக்காத குப்பைகள் என கொட்டப்பட்டு உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
அகற்ற நடவடிக்கை 
இந்த சாலை வழியாகத்தான் புயல் பாதுகாப்பு கூடம், கடலோர காவல் படை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிக்கு செல்ல வேண்டும். இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே இதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story